உடம்பில் காணப்படும் வீக்கம் மற்றும் வெண்குஷ்டம் குணமாக சில எளிய வீட்டு வைத்தியம்.
- கண்டங்கத்திரிப் பழம் 100 கிராம்
- காட்டு சீரகம் 50 கிராம்
- மயில்துத்தம் 50 கிராம்
- நன்னாரி வேர் 50 கிராம்
இவற்றைக் கல்வத்திலிட்டு சிறு செருப்படைய சாறுவிட்டு கரைத்து அரைத்து வழித்து எடுத்து இதனுடன் 250 மில்லி நீரடி முத்து எண்ணெய் கலந்து அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து வரவேண்டும்.
சருகு போல் திரண்டு வரும் பதத்தில் இறக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு வெளிப் பிரயோகம் ஆக பூசிவர வெண் குட்டத்தின் நிறம் மாறும்.
"பிணிக்கும் பிணியாகும் மாலங்க கல்" என்று துளசியின் பெருமையை பற்றி சொல்வான் மருத்துவ மேதை தேரன். துளசி பொதுவாக இருமல் சளி போன்ற நோய்களைத் தீர்க்கும் என்ற எண்ணம் உள்ளது.
ஆனால் ஒருசில சாதுக்களும் பெரியவர்களும் மிக கடுமையான தோல் நோய்களுக்கு கூட துளசியை பிரயோகம் செய்து உள்ளனர் இன்றும் இரகசிய முறையாக செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட இரகசிய முறைகளில் ஒன்றுதான் இதுவும். துளசியின் 5 அங்கங்களையும் (இலை, பூ, விதை, பட்டை, வேர்) நிழலில் உலர்த்தி இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அத்துடன் கீழ்க்கண்டவற்றில் கலந்து
- துளசி பொடி 500
- பலகரை பற்பம் 300 கிராம்
- லோக மாண்டுரம் 300 கிராம்
காலை மாலை இரவு மூன்று வேளையும் பசும் பாலில் சாப்பிட்டுவர வேண்டும்.
- துளசி சூரணம் 100 கிராம்
- காட்டுச் சீரகப் பொடி 25 கிராம்
அளவில் கலந்து வைத்துக்கொண்டு அந்த பொடியில் கொஞ்சம் சிறிது உப்பும் சேர்த்து தண்ணீர் விட்டு குழைத்து வெண்புள்ளிகளின் மீது பூசி வர குணமாகும்.
No comments:
Post a Comment