தொல்லை தரும் தோல் நோய்கள் | கிரந்திப் புண் மற்றும் தேமல் போன்ற வியாதிகளை குணமாக்கும் இயற்கை மருத்துவமுறை
மருந்து 1
இதற்கு ஒரு நல்ல மருந்தை பார்ப்போம். திப்பிலி கடுக்காய் சுக்கு கிரந்திநாயகம் வேர், வேலிபருத்தி, களர்ச்சி வேர், நன்னாரி வேர், கண்டங்கத்திரி வேர், பூதகரப்பான் பட்டை, வேப்பம் பட்டை ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் அளவு சேகரித்து சுத்தம் பார்த்து சுத்தமான கல் உரல் அல்லது கல்வத்திலிட்டு இடித்துக்கொள்ள வேண்டும். அதனுடன் அரை லிட்டர் சிற்றாமணக்கு எண்ணெயை கலந்து அடுப்பில் ஏற்றி கொதித்த பின் இறக்கி கொள்ள வேண்டும். வடிகட்டி பத்திரமாக கண்ணாடி புட்டி போன்ற பாத்திரங்களில் வைத்திருந்து வேளைக்கு அரை தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர வேண்டும்.
பிணி குணமாகும் வரை சாப்பிடவேண்டும். கடுமையான பிணியாக இருந்தால் ஒரு மண்டலம் (40 நாள்) சாப்பிட வேண்டியது அவசியம். இதற்கு பத்தியம் காக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டாலும் உணவில் கரப்பான் பண்டங்களான கத்திரிக்காய் போன்றவற்றை விலக்குவது நல்லது. உப்பு புளி உபயோகித்தல் சீதகமாக இருப்பதும் விரும்பத்தக்கது.
சிலருக்கு உடலில் கலந்து நீர் இருக்கும். இவர்கள் செருப்பு அழுத்தமாக அணிந்த ஆடைகளை இறுக்கமாக அணிந்தால் அந்த இடங்கள் புண்ணாகி எளிதில் ஆறாது. இப்படி ஏற்படும் புண்ணுக்கு எலுமிச்சம்பழச் சாற்றை தொடர்ந்து தடவி வந்தால் குணமாகி விடும். எலுமிச்சம்பழச் சாற்றை தொடர்ந்து புண் ஆறும் வரை விடாமல் போட்டு வர வேண்டும்.
பெண்கள் கைகளுக்கு சிவப்பு நிறம் ஏற்ற பயன்படுத்தும் மருதோன்றி இலையை ஒரு கைப்பிடி பறித்து சிறு துண்டு ஒன்றை வைத்து நன்கு அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். அடர்ந்த கருமை நிறமுடைய தேமலுக்கு இதனை தடவி வைத்திருந்து அரப்பு தூள் போட்டு குளிர்ந்த நீரில் தேய்த்து குளிக்க வேண்டும்.
பூவரசமரம் எங்கும் காணப்படும். அந்த மரத்தின் காயைப் பிஞ்சாக பார்த்து பறித்துக் கொள்ளவும். அதனை கத்தியால் பாதியாக அறுத்து தேமல் உள்ள இடத்தில் நன்றாக அழுத்தித் தேய்க்கவும். ஒரு நாள் வரை அப்படியே விட்டு விட்டு மறுநாள் கழுவிவிடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் படர் தேமல் விலகி போகும்.
கடல் அழிஞ்சிப் பட்டையை சுத்தம் செய்து பழகிய மண்பாண்டத்தில் போட்டு இரண்டு லிட்டர் அளவுக்கு நீர் விட்டு ஊற வைக்கவேண்டும். மறுநாள் காலையில் இதனை அடுப்பில் ஏற்றி தீயில் சுண்டவைத்து 200 மில்லி அளவுக்கு ஆக்கிக்கொள்ள வேண்டும். இறக்கி ஆற வைத்து வடிகட்டி ஒரு வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் இரண்டு வேளை இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் படர்தாமரை மறைந்துவிடும்.
முகத்தில் தேமல் தோன்றினால் முகத் தோற்றத்தையே கெடுத்துவிடும். ஆகவே முகத்தில் தேமல் வந்தால் உடனடியாக மருத்துவம் செய்து குணப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு எளிய மருந்து இருக்கிறது. பூவரசு இலையை சேகரித்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு கல்வத்தில் இட்டு அரைக்க வேண்டும். நன்கு மைய அரைத்து அந்த விழுதை இரவில் தூங்குவதற்கு முன் முகத்தில் தேமல் உள்ள இடத்தில் நன்றாகத் தடவி வைத்துக் கொள்ள வேண்டும். காலையில் வெந்நீர் விட்டு நன்கு கழுவி விடவேண்டும். பகலில் ஓய்வு இருந்தால் காலையிலேயே இந்த விழுதை முகத்தில் தடவி வைத்திருந்து மாலையில் வெந்நீரில் கழுவி விடலாம்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் தோன்றும் தேமல் அகலுவதோடு முகம் மென்மையும் சாந்தியும் பெறும்.
மருந்து 2
இதன் இலுப்ப மரத்தின் இலையை சேகரித்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவேண்டும். குளிக்கப் போவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக இந்த விழுதை தேமல் உள்ள இடங்களில் தடவி வைத்திருந்து குளிக்கும்போது தேய்த்து குளித்து வந்தால் தேமல் அகன்றுவிடும். தேமல் மட்டுமின்றி எல்லாவிதமான சர்ம வியாதிகளுக்கு நல்லது.
மருந்து 3
நான்கு பல் பூண்டு எடுத்து வாடாத பச்சை வெற்றிலையுடன் சேர்த்து கசக்கி சாறெடுத்து தலையில் பூசி வந்தால் தேமல் மறைந்து விடும்.
மருந்து 4
நல்ல பருமனான சதை பிடிப்புள்ள ஒரு வெள்ளைப் பூண்டை எடுத்து உரித்து ஒரு சட்டியில் உதிர்த்து போட வேண்டும். அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு இளஞ்சூட்டில் காய்ச்சி இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தொடர்ந்து தேமல் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் தேமல் மறைந்து விடும்.
மருந்து 5
தேமல் அல்லது படர்தாமரை உள்ள இடத்தில் சுட்ட அரைப்பைத் தேய்த்து நன்றாக கழுவித் துடைத்துவிட வேண்டும். நன்கு அரைத்து பற்றுப் போட்டு விட வேண்டும். மறுநாள் அதனை கழுவி சுத்தம் செய்துவிடவேண்டும். நாட்பட்ட தேமல் படர்தாமரைக்கு இது நல்லது.
No comments:
Post a Comment