உடலில் காணப்படும் வீக்கம் வடிய எளிய இயற்கை மருத்துவ முறைகள்
வீக்கம் வடிய
முருங்கை மரத்தின் இலைகளை வதக்கி வீக்கத்தின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும். பொடுதலை இலையை வதக்கி இளம் சூட்டுடன் வைத்துக் கட்டினாலும் வீக்கம் இறங்கும். வீக்கத்துக்கு ஈர்க்கு நீக்கிய வேப்ப இலையை வதக்கி வைத்தும் கட்டலாம்.
எருக்கம் பாலைத் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் அடங்கும். எருக்கன் பால் நாக்கில் படக்கூடாது. கன்னத்தில் தொண்டைப் பகுதியை ஒட்டி தோன்றும் வீக்கத்திற்கு வேப்பங் கொழுந்தையும் மஞ்சளையும் சம அளவு கலந்து அரைத்து பற்றுப் போட்டு வர வீக்கம் குறையும்.
சுளுக்குக் காரணமாக வீக்கம் ஏற்பட்டு இருந்தால் ஓதிய மரத்து பட்டையை சுத்தம் செய்து நறுக்கி தூளாக்கி புளித்த தண்ணீர் கலந்து வீக்கம் உள்ள இடத்தில் வைத்து கட்ட வேண்டும். இந்தக் கட்டுக் காய காய இதன்மீது புளித்த தண்ணீரை விட்டு பதமாக கொண்டிருக்கவேண்டும்.
கொத்தமல்லி இலையை வாடாத நிலையில் எடுத்து உடலில் சருமம் சுரசுரப்பாக உள்ள பகுதிகளின் மீது அழுத்த தேய்த்து விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சருமம் மென்மையடையும்.
பாசிப்பயறு, கடலை பருப்பு ஆகியவை வகைக்கு 100 கிராம் அளவுக்கும் பச்சை அரிசி 200 கிராம் அளவுக்கும் சந்தனகட்டை அகில் கட்டை 40 கிராம் அளவு சேகரித்து இந்த பொருட்களை சேர்த்து நன்றாக அதைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தூளை காலை நேரத்தில் உடம்பில் தேய்த்து குளிர்ந்த நீரில் தொடர்ந்து குளித்து வந்தால் சரும நோய்கள் தோன்றாது. வியர்வை நாற்றம், கற்றாழை நாற்றம் போன்றவையும் அகன்றுவிடும்.
பச்சைபயிறு மாவு கடலை மாவு கஸ்தூரி மஞ்சள் ஆகிய மூன்றையும் சம அளவு கலந்து தினமும் குடித்து வந்தால் சருமம் மென்மையாகவும் காந்தியுடனும் திகழும்.
No comments:
Post a Comment