மேக நோயைக் குணப்படுத்தும் வழிமுறைகள் Methods of curing cloud disease
மேகநோய்கள்
வல்லாரைக் கீரையைச் சேகரித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனை புட்டு வேக வைப்பது போன்று வேக வைத்து நிழலில் உலர்த்தவேண்டும். காய்ந்து சருகான பிறகு இடித்து தூளாக்கிக் கொள்ளவேண்டும். பரங்கி சக்கை நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். அதனை கலந்துகொள்ளவேண்டும்.
இந்தச் சூரணத்தை தேக்கரண்டி அளவு காலையிலும் மாலையிலும் நெய் சேர்த்து உண்டு வந்தால் மேக நோய் விரைவில் குணமாகும்.
வெல்லம், சுக்கு வகைக்கு 10 கிராம் எடுத்து பழகிய மண்சட்டியில் இட்டு மூன்று லிட்டர் நீர்விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சவும். இந்த கசாயத்தை காலையில் 1 அவுன்ஸ் அளவிற்கு தொடர்ந்து சாப்பிட்டு வர நோய் குணமாகும்.
- வெள்ளை வெங்காயம் 100 கிராம்
- பசுவின் பால் ஒரு லிட்டர்
- நெய் 150 கிராம்
- சர்க்கரை 150 கிராம்
- கோதுமை மாவு 150 கிராம் சேகரித்து கொள்ள வேண்டும்
பழகிய சட்டியில் பாலை ஊற்றி வெங்காயத்தை தோலை உரித்துப் போடவேண்டும். நன்கு தீயில் காய்ச்சவேண்டும். அடிக்கடி கரண்டியால் கிண்டி மெழுகுபதமாக உடனே இறக்கி விட வேண்டும். உடனே சர்க்கரையையும் கோதுமை மாவையும் அதன் மீது தூவி கிளறி கொடுக்கவேண்டும். லேகிய பதம் ஆனவுடன் வாயகன்ற கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு ஒரு வேளைக்கு ஒரு கொட்டைப்பாக்கு அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் சிறு நீர் மூலமாக நீர் இறங்கிவிடும். சிறுநீர் இறக்கம் அதிகமாக இருந்தால் மருந்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடவேண்டும். மேகநோய் தொடக்க நிலையில் இருந்தால் தொடர்ந்து அதிகாலையில் வெறும் வயிற்றில் பதநீர் அருந்தி வந்தால் நோய் கட்டுப்படுத்தப்படும்.
மேக நோய்க்கு அவரை இலை ஒரு நல்ல மூலிகையாக பயன்படுகிறது. நல்ல பசுமையான அவரை இலையை பறித்து கழுவி சுத்தமான அம்மி அல்லது கல்வத்திலிட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதை ஒரு கொட்டைப்பாக்களவு காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாட்களுக்குள் நல்ல குணம் தெரியும். இந்த மூன்று நாட்களும் உணவில் உப்பை அறவே நீக்கி விடுவது நல்லது. புளி அவசியம் எனபட்டால் சுட்டு சேர்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment