Natural paranormal treatment for all sores on the body
தீயினால் சுட்ட புண்
தீயினால் சுட்ட புண்இருந்தால் உடனே தேங்காய் எண்ணையையும் சுண்ணாம்பு தெளிவையும் மேலே விடவும். தீயினால் சுட்ட உடனே அந்த இடத்தில் தேனை தடவினால் கொப்பளம் எழாது புண்கள் விரைவில் ஆறிவிடும்.
சேற்றுப் புண்
கால் விரல் இடுக்குகளில் சேற்றுப் புண் ஏற்பட்டிருந்தால் வேப்ப எண்ணையை காய்ச்சி ஆற வைத்து மெல்லிய துணியில் நனைத்து விரல் இடுக்குகளில் இரவில் வைத்து காலையில் எடுத்து விட வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் இரண்டு நாளிலேயே குணம் தெரியும்.
ரணம்
ஊமத்தை வேர், வெள்ளை வெங்காயம், வசம்பு ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் எடுத்து நறுக்கி போட்டு 100 மில்லி நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்ச வேண்டும். இந்த தலத்தை கண்ணாடி புட்டியில் பத்திரப் படுத்தி உடலில் எந்த பாகத்தில் ரணம் ஏற்பட்டு இருந்தாலும் அதில் கோழி இறகால் தொட்டு தடவி வந்தால் விரைவில் ஆறிவிடும்.
ரத்தப்பெருக்கு
அடி காரணமாகவோ கத்திவெட்டு போன்ற காரணங்களினாலோ ரத்தப்பெருக்கு ஏற்பட்டால் சாதிக்காயை சுட்டு சாம்பலாக்கி அந்த சாம்பலை வைத்து அழுத்த வேண்டும். உடனே ரத்தப்போக்கு நின்றுவிடும்.
மார்பக காம்பில் வெடிப்பு
பால் கொடுக்கும் குழந்தையுடைய பெண் மார்பகங்களுக்கு மார்பக காம்பில் வெடிப்பு ஏற்படுவது உண்டு. அப்படி ஏற்பட்டிருந்தால் வெங்காயத்தை அடுப்பிலிட்டு பொரித்து தூளாக்கி தோலை சுத்தமான நீரில் கரைத்து சுத்தமான மெல்லிய துணியை அதில் நனைத்து மார்புக்காம்பு வெடிப்பின் மீது போட்டு வரவும் குணமாகிவிடும். குழந்தைக்கு பால் கொடுக்கும்போது அந்தத் துணியை அகற்றி விடவும்.
பித்த வெடிப்பு
பித்தம் காரணமாக கால்களில் வெடிப்பு தோன்றியிருந்தால் வேப்பிலையையும் மஞ்சளையும் அரைத்துப் போட்டால் குணமாகி விடும்.
மருத இலையை கடுக்காய் அளவு எடுத்து காய்ச்சிய பாலோடு சேர்த்து காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால் பித்த வெடிப்பாக விடும்.
நல்ல சுண்ணாம்பையும் விளக்கெண்ணெயையும் கலந்து குழப்பி வெண்ணெய் பக்குவமாக செய்து கொண்டு அந்த களிம்பை பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் விரைவில் குணம் தெரியும்.
எச்சில் புண்கள்
பூவரசன் விதையை சுத்தம் செய்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து அந்த விழுதை எச்சில் புண்கள் தோன்றி உள்ள இடத்தில் கழுவ நல்ல பலன் தரும்.
சிலந்திப்புண்
சிலந்திப்புண் போன்ற ஒருவகை குழிப் புண்ணாக இருந்து விரைவில் ஆறாது இதற்கு ஒரு மருந்து பார்ப்போம்.
வேலிப்பருத்தி செடியைக் கொண்டு வந்து இலைகளை ஆய்ந்து இடித்து சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். இந்த சாற்றை மெல்லிய துணியில் நனைத்து சிலந்தி புண் மீது வைத்துக் கட்டிவர புண் குணமாகும்.
நாயுருவி செடியை சுத்தம் செய்து இடித்து சாறெடுத்து இந்த சாருடன் கலந்து குழப்பி சிலந்தி புண் மேல் தடவி வர குணம் தெரியும்.
சாதாரண புண்கள்
கடுக்காயை தண்ணீர் விட்டு சந்தனக் கல்லில் இழைத்து பூசிவர சாதாரண புண்கள் விரைவில் ஆறிவிடும்.
சிராய்ப்பு
மஞ்சள், கடுக்காய், வேப்பிலை இவைகளை சம அளவில் எடுத்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து எடுத்து சிராய்ப்பு காரணமாகத் தோன்றும் புண்களில் தடவினால் விரைவில் ஆறும்.
சுத்தம் செய்த வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து அந்த விழுதை போட்டு வந்தால் அம்மையினால் ஏற்பட்ட புண் ஆறும்.
பவுத்திரக்கட்டி
ஈரவெங்காயம், வெள்ளைக்கீரை இலை, தும்பை வேர் ஆகிய மூன்றையும் நன்றாக அரைத்து ஆசனவாயில் பவுத்திரக்கட்டி இருக்கும் இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் கட்டி உடைந்து விரைவில் ஆறிவிடும்.
மேகநோய்
பொடுதலை இலையையும் மஞ்சளையும் சேர்த்து அரைத்த விழுதை போட்டு வந்தால் மேகநோய் ஆறிவிடும்.
வெட்டு காயம்
பால் சுத்தி என்று ஒரு செடி உண்டு. அதன் காய் மீது தண்ணீர் பட்டால் வெடிக்கும். அந்த செடியின் இலையை தண்ணீர் விடாமல் அரைக்கவேண்டும். அடிபட்ட அல்லது வெட்டு காயத்துக்கு இந்த விழுதை வைத்து கட்டினால் ஒரே நாளில் குணம் தெரியும். கட்டை உடனடியாக பிடிக்க தேவையில்லை.
இரண்டு நாட்கள் அப்படியே விட்டு பிறகு சிறிது தேங்காய் எண்ணெய் தடவி வரவேண்டும். தீயினால் சுட்ட புண்ணிற்கு பழைய கோதுமை சுட்டு அந்த சாம்பலை புண் உள்ள இடத்தில் தூவினால் புண் விரைவில் ஆறிவிடும்.
நெருப்பு சுட்டபுண்
வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து நெருப்பு சுட்ட புண் மீது தடவி வெற்றிலையால் மூடி கட்டி வைத்தால் நெருப்பு சுட்டபுண் சீக்கிரமாக ஆறும்.
உத்தாமணிச் செடியின் பாலை புண்ணின் மேல் தடவி வந்தால் புண் ஆறும்.
No comments:
Post a Comment