உடலில் ஏற்படும் கட்டிகளை குணப்படுத்தும் எளிய இயற்கை மருத்துவமுறை Simple natural remedies to cure tumors in the body
கட்டிகள்
மருந்து 1
கடற்பாலை இலையைக் கொண்டு வந்து கட்டி உள்ள இடத்தில் இலையின் கீழ் பாகம் இருக்குமாறு வைத்துக் கட்டிவிட வேண்டும். இப்படி செய்தால் தொடக்க நிலையில் உள்ள கட்டிகள் அமுந்துவிடும். முதிர்ந்த கட்டிகள் விரைவில் பழுத்து உடைந்து விடும்.
கட்டி உடைந்து பின்னர் அதன் சீழ் முதலியவற்றை அகற்றி சுத்தம் செய்து கடற்பாலை இலையின் மேல் புறம் படும்படியாக வைத்து கட்டி வந்தால் உடைந்த கட்டில் புண் ஆறிவிடும்.
மருந்து 2
சாப்பிடும் ரொட்டியை வாங்கி அதன் சோற்றுப்பகுதியை மட்டும் பிரித்தெடுத்து ஒரு கரண்டியில் ஊற்றி தண்ணீர் விட்டுக் குழப்பி சுட வைக்க வேண்டும். கை பொறுக்கும் சூட்டில் அதனை எடுத்து சட்டியில் கட்டியின் மீது வைத்துக் கட்டினால் கட்டி உடைந்து விடும். கட்டி வராமல் இருந்தால் தொடர்ந்து 2 அல்லது 3 நாட்கள் கட்ட வேண்டும்.
மருந்து 3
சப்பாத்தி கள்ளி செடியின் பூவை கொண்டு வந்து கழுவிச் சுத்தம் செய்து கல்வத்திலிட்டு விழுதாக அரைக்கவேண்டும். அந்த விழுதை கட்டியின் மீது வைத்து கட்டி நிலைக்கேற்ப தொடர்ந்து கட்டி வந்தால் கட்டி உடைந்து இரத்தம் தானாக ஆறிவிடும். கட்டி நிலைக்கேற்ப சுண்ணாம்பை எடுத்து நல்ல தேனுடன் சேர்த்து நன்கு குழைத்து கட்டி மீது தடவி வந்தால் உதட்டின் தன்மைக்கேற்ப அமுங்கவோ உடையவோ செய்யும். இந்த மருந்து தடவிய பிறகு காயக்காய வரவர வென இழுக்கும். அதனைப் பொறுத்துக் கொள்ளக் கூடியவர்கள் மட்டும் இந்த முறையைக் கையாளவும்.
எருக்கம் பாலை சேகரித்துக் கொள்ளவும். அதில் மஞ்சளை நன்றாக அரைத்து விழுதாக்கி அந்த விழுதை கட்டியின் மீது காயக்காய பூசி வரவும். பெரிய வெங்காயத்தை எடுத்துக்கொள்ளவும். அதனை அடுப்பிலிட்டு சுட்டு சிறிது மஞ்சள் தூளையும் நெய்யையும் விட்டு பிசைந்து கட்டியின் மீது வைத்துக் கட்டி வந்தால் கட்டிகள் விரைவில் பழுத்து உடைந்து விடும்.
கருஞ்சீரகப் பொடியை சேர்த்து மைய அரைத்து கட்டியின் மீது இரண்டு மூன்று வேளை தடவி வந்தால் கட்டி உடைந்துவிடும். சப்பாத்திகள்ளி பூவையும் நல்லெண்ணையும் சேர்த்து மைய அரைத்து கட்டிகள் மீது தொடர்ந்து பூசி வந்தால் கட்டிகள் சிரமமின்றி பழுத்து உடைந்து விடும். கட்டியாகவோ ஆறாத ரணமாக இருந்தால் வேப்பிலையை சேகரித்து அவற்றின் ஈர்க்குகளை ஆய்ந்து விட்டு அரைத்து கட்டி அல்லது வீக்கம் உள்ள இடத்தில் கட்டினால் கட்டி உடையும். வீக்கம் தணியும். ஆறாத ரணமாக இருந்தால் இதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து கொள்வது நல்லது. ஊமத்தன் செடியின் தண்டை கொண்டு வந்து அதன் தண்டை மட்டும் அனலில் சுட்டு சாம்பலாக்க வேண்டும். அந்த சாம்பலுடன் விளக்கெண்ணையை விட்டுப் வீக்கத்தின் மேல் தடவி வந்தால் கட்டி உடையும்.
No comments:
Post a Comment