முகப்பரு மற்றும் வெண்குஷ்டம் நீக்கும் எளிய இயற்கை வழிமுறைகள் Simple Natural Ways To Get Rid Of Acne
முகப்பரு
கலப்பற்ற புனுகு தடவி வந்தால் முகப்பரு நீங்கும். பால் ஏட்டை முகத்தில் தடவி கொஞ்ச நேரம் வைத்திருந்து கடலை மாவு தேய்த்து சில நாட்கள் குழித்து வந்தால் முகப்பரு மறையும். வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி பரு உள்ள இடத்தில் அழுத்தி தேய்த்தால் நல்ல குணம் தெரியும். சாதிகாய் மிளகு சந்தனம் மூன்றையும் அரைத்து பருவில் தடவி வந்தால் பரு மறையும்.வெண்குஷ்டம்
- மஞ்சள் 100 கிராம்
- கார்போக அரிசி 50 கிராம்
- உரித்த வெங்காயம் 100 கிராம்
- துளசி இலை 100 கிராம்
இந்த பொருட்களை உரலில் போட்டு நன்கு இடித்து பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும்
தனித்தனியே இடித்து பொடித்த மஞ்சள் தூளையும் கார்போக அரிசியும் கல்வத்திலிட்டு வெங்காயம் துளசி சாறு விட்டு நன்றாக அரைத்து சுண்டைக்காய் அளவு மாத்திரையாக உருட்டி நிழலில் உலர்த்தி காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த மாத்திரையை தண்ணீர் விட்டு உரசி பற்றுப் போட்டு வர வெள்ளை நிறம் மாறும். இதே மாத்திரையை உள்ளுக்கும் தரலாம்.
- அன்னபேதி செந்தூரம் 300 மில்லிகிராம்
- பலகரை பற்பம் 300 மில்லி கிராம்
அளவு எடுத்து இந்த மாத்திரையில் அரை மாத்திரையும் சேர்த்து தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் வெண்குஷ்டம் மாறும். இந்த மருந்தினால் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் அளவும் அதிகரிக்கிறது.
- அத்திப்பட்டை சுரண்ட 100 கிராம்
- கார்போக அரிசி 200 கிராம்
- கடுக்காய் பொடி 50 கிராம்
- பூவரசம் பட்டை சூரணம் 50 கிராம்
- தான்றிக்காய் சூரணம் 50 கிராம்
இவற்றை ஒன்றாக கலந்து ஒரு மண் பானையில் போட்டு நீல அவுரியை இடித்து பிளிந்து சாறு 500 மில்லி இதில் விட்டு பானையின் வாயை ஒரு மெல்லிய துணியால் கட்டி வெயிலில் வைத்து விட வேண்டும்.
சாறெல்லாம் சுண்டியபின் முன்போலவே நொச்சி சாறு விட்டு வெயிலில் வைத்து வர வேண்டும். இப்படியே கரிசாலை சாறு, சங்கங் குப்பி சாறு, வல்லாரைச் சாறில் பாவனை செய்து உலர்த்தி இடித்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் பொடியில் அதிகபட்சமாக ஒரு கிராம் அளவு காலை மாலை இரவு மூன்று வேளையும் தண்ணீரில் சாப்பிட்டுவரவேண்டும். குட்டத்தால் பாதிக்கப்பட்ட தோலிவ் சிறுசிறு கறுப்புப் புள்ளிகளாய் விழுந்து பரவி தோலில் நிறம் மாறி இயற்கை நிறத்தை அடையும்.
No comments:
Post a Comment