ஒட்டுண்ணிகளால் ஏற்படும் தொந்தரவுகள் Skin diseases caused by parasites - Kalvimalar-கல்விமலர்

Latest

Wednesday, October 21, 2020

ஒட்டுண்ணிகளால் ஏற்படும் தொந்தரவுகள் Skin diseases caused by parasites

ஒட்டுண்ணிகளால் ஏற்படும் தோல் நோய்கள் Skin diseases caused by parasites



ஒரு வகை கிழங்கு வகைகளில் ஏற்படுகிறது.  இந்த உண்ணிகள் ஒருவகை மனிதனுடைய தோலை மட்டும் தான் தாக்கும். வேறு சில வகைகள் விலங்குகளை தாக்கும். சில சமயங்களில் அவை மனிதரையும் தாக்கலாம். பொதுவாக மனிதனை பாதிக்கும் உண்ணியினால் சிரங்கு அதிகமாக ஏற்படுகிறது.  ஆனால் சில சமயங்களில் நாய் போன்ற வீட்டு விலங்குகளை பாதிக்கும். உண்ணிகளாலும் சில சமயங்களில் மனிதனுக்கு சிரங்கு ஏற்படலாம். 

சிரங்கு உண்ணிகள் பொதுவாக போட்டியாக பரவுகின்றன. முக்கியமாக சிரங்கினால் பாதிக்கப்பட்டவருடன் சேர்ந்து ஒன்றாகி நிற்கும் போது அல்லது படுத்திருக்கும்போது மற்றவர்களுக்கும் பரவுகிறது.  அதுபோல பாதிக்கப்பட்டவரின் ஆடைகளை  மற்றவர்கள் அணியும்போது அவர்களுக்கு சரங்கு பரவுகின்றது.

சிரங்கு உண்மையில் நோய்க்கு காரணமாக இருப்பது பெண் உண்ணிதான். ஆண் உண்ணிகள் பொதுவாக இனச் சேர்க்கையில் ஈடுபட்டதும் இறந்து போகின்றன. கர்ப்பமான பெண் உண்ணிகள் புறத்தேதாலை துளைத்துக் கொண்டு மேல்தோலுக்குள் சென்று முட்டையிடுகின்றன. அந்த முட்டைகளிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் முதிர்ச்சி அடைந்து ஆணாகவும் பெண்ணாகவும் வளர்கின்றன.  இவ்வாறு உண்ணிகள் பல்கிப் பெருகி சிரங்கு உடல் முழுவதும் பரவுகிறது. பொதுவாக கர்ப்பமான பெண் உண்ணிகள்தான் மற்றவர்களுக்கு பரவி அவர்களுக்கும் சிரங்கை ஏற்படுத்துகின்றன. 

உண்ணிகள் தோலில் துளைத்துக் கொண்டு சென்ற பகுதியில் சிறு கொப்புளம் ஏற்படுகின்றது.  அந்த பகுதியில் அதிக ஊத்தமம் இருக்கும். பொதுவாக விரல் இடுக்குகள்,  மணிக்கட்டு,  முழங்கை கக்கம், அடிவயிறு, உட்காரும் இடம் தொடைகள்,  கணுக்கால், ஆணுறுப்பு, பெண்களின் மார்பகங்கள் ஆகிய பகுதிகளில் தான் சிரங்கு புண்கள் அதிகமாக ஏற்படுகின்றன.

பென்சைல் பென்சோயேட் வேசலைன் ஊடகமாக கொண்ட கந்தகம் ஆகிய இரண்டும்தான் சிரங்கிற்கு சிகிச்சை அளிக்க அதிகமாக பயன்படுகின்றது. நோயாளி மாலையில் வெந்நீரில் குளித்து சிரங்கு புண்கள் எல்லாம் உடையுமாறு தோலை நன்கு தேய்க்கவேண்டும். பின்னர் முகம் தலை தவிர உடலின் மற்ற பகுதிகளில் மருந்து தடவ வேண்டும். அடுத்த நாள் குளிக்கக்கூடாது. உடைகளை மாற்றக் கூடாது. அதனால் காலையிலும் மாலையிலும் உடல் முழுவதும் மருந்தை நன்கு கழுவ வேண்டும். இதனால் மருந்து தொடர்ந்து செயல்படும். 

மூன்றாவது நாள் காலையில் நோயாளி நன்கு குளித்து ஆடைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அணிந்திருந்த உடைகளையும் படுக்கையும் துவைத்து வெயிலில் நன்கு உலர்த்த வேண்டும்.

பேன் தொல்லை 

மனிதர்களின் உடலில் பொதுவாக 3 வகையான பேன்கள் காணப்படுகின்றன. ஒருவகை பேன் தலையில் மட்டும் வாழ்கின்றது. இதை தலைப்பேன் என்று கூறலாம். இரண்டாவது வகை பேண் பொதுவாக சீலைப் பேன் என்று அழைக்கப்படுகிறது. இது உடைகளில் வாழ்கின்றது. மூன்றாவது வகைப்பேன். பொதுவாக அடிவயிற்றில் காணப்படும்.  முடியிலும் கழுத்திலும் வாழ்கின்றது. 

தலையில் பேன்கள் குறைவாக இருக்கும்போது பேன்  சீப்பின்னால் இழுத்து அவற்றை அகற்றி விடலாம்.  ஆனால் பேன்கள் அதிகமாக இருக்கும்போது சில மருந்துகளை பயன்படுத்தி அவற்றை கொல்ல வேண்டும். கம்மா பென்சீன் அக்ஸா குளோரைடு மாலாத்தியின் ஆகிய மருந்துகளை பேன்களை கொல்வதற்கு பயன்படுத்தலாம்.  

இந்த மருந்துகளில் ஏதாவது ஒன்றை தலையில் தேய்த்து ஒரு துணியில் தலையை நன்கு மூடி கட்டி விட வேண்டும்.  பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து சாம்பு சோப்பை பயன்படுத்தி தலையை நன்கு கழுவி விடவேண்டும். பொதுவாக ஒரு தடவையிலேயே பேன்கள் அனைத்தும் அழிந்துவிடும். சீலைப்பேன்களை அளிக்க ஆடைகளை நன்கு கொதிக்கவைக்க வேண்டும். அல்லது அவற்றை மாலத்தியான் கரைசலில் ஆழ்த்தி வைக்க வேண்டும். அடிவயிற்றில் காணப்படும் பேன்களை அழிக்கவும் கம்மா பென்சிலின் ஹெக்ஸா  குளோரைடைப் பயன்படுத்தலாம். 

ஏதாவது இரண்டாம் நிலைத் தொற்று ஏற்பட்டிருந்தால் ஊடுருவி குணப்படுத்தும் பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாம்.

வெண்ணிற புள்ளிகள் 

உடலில் தோன்றும் வெண்ணிறப்புள்ளிகள் உடலின் அழகை பாதிப்பது மட்டுமல்ல. மனதில் எப்போதும் ஒரு உறுத்தலையும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். 

உடலில் தோன்றும் இவைகளை நம் நாட்டில் "வெண்குஷ்டம்" என்கிறோம். அறிவியல் ரீதியாக குஷ்டம் என்ற தொழுநோய்க்கும் இந்த உடல் நிறம் மாறுபாட்டிற்கும் எந்தவித உறவும் இல்லை என்றாலும் இன்றும் உடலில் தோன்றும் வெண்புள்ளிகள் இப்பெயர் கொண்டே அழைக்கப்படுகிறது. 

இத்திட்டுக்கள் உடலில் தோன்ற காரணம் தோலில் நிறத்தை கொடுக்கும் நிறமி செல்கள் (மெலனோசெம்)களில் ஏற்படும் மாறுபாடுகளாகும்.  இம்மாறுபாடுகள் உடலில் நிறமிகள் அற்ற இடங்களிலேயே ஏற்படுகின்றன.

இவெண்ணிற மாற்றம் உடலில் பால்,  சுண்ணாம்பு அல்லது உடலில் தூய வெள்ளை போன்ற நிறங்களில் தோன்றும்.  இப்புள்ளிகள் ஆரம்பத்தில் சிறு வட்டமாகவோ,  நீண்ட வட்டமாகவோ தோன்றினாலும் சில சமயங்களில் இவை ஒன்று கூடி உடல் முழுவதும் பரவிய நிலையில் காணப்படும்.  கோடை காலங்களில் தோல் சற்று கறுத்து காணப்படுவதால் வெண்புள்ளிகள் பளிச்சென்று தெரியும். பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் இப்புள்ளிகள் சிவந்த பிறகு தானாகவே வெண் நிறத்தை அடையும். வெண் நிறமாக மாறிய தோல்களின் மேல் உள்ளமுடி சில சமயம் வெளுத்தும் தொடு உணர்வு சற்று குறைந்தும் இருக்கும்.  இவ்விடங்களில் வியர்க்கும் நிலையானது மற்ற இடங்களை விட சற்று கூடுதலாக இருக்கும்.  இப்புள்ளிகளை சுற்றி சில சமயம் கறுத்த கறைகள் தோன்றும். 

இவ்வெண்திட்டுகள் பல வகைகளில் உடலில் ஏற்படுகின்றன.  முதல் வகையில் தலை, பிறப்புறுப்பு, புட்டம்,  பமுகத்தில் ஒரு பகுதி ஆகிய இடங்களில் தோன்றும். இரண்டாவது வகையில் துணிகள் மறைக்காத இடங்களான தலை கழுத்து மற்றும் காயம்பட்ட இடங்கள் தொப்புள் மடிப்பு உதடு போன்ற இடங்களில் வெண்திட்டுகள் தோலில் குவிந்த நிலையில் பரவும் தன்மையுடன் காணப்படும்.  பெருமளவில் பரவியது எது நல்லதோல் எதுவெண்ணிறமான தோல் என்று அடையாளம் கண்டு கொள்ளக் கூட முடியாத நிலை ஏற்படும்.  சில சமயம் உடல் முழுவதும் சிறு சிறு புள்ளிகள் தோன்றி பிறவிக் கோளாறு வெண் தோல் நோய் போல் உடல் முழுவதும் பரவி காட்சியளிக்கும். 

இவ்வெண்திட்டு உடலில் எல்லா நிலைகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.  சிலருக்கு கை கால்களில் வெண் திட்டுத் தோன்றி மேலே பரவிக் கொண்டே செல்லும். ஆனால் மற்றும் சிலருக்கு இப்புள்ளிகள் ஓரிரு ஆண்டுகள் பரவாது. தோன்றிய நிலையிலேயே இருந்து பிறகு மறைந்து விடும். அல்லது வளர ஆரம்பிக்கும்.

இவ் வெண்ணிற மாறுபாடு உடலில் தோன்ற காரணம் என்ன என்று அறிவியல்பூர்வமாக இன்னும் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. மேலும் சில சமயங்களில் இதற்கான சோதனை செய்யும் முன்னரே இவை தானாக கூட மறைந்து விடுகின்றன. 

இவ்வெண்திட்டுகள் பாரம்பரியமாக சுமார் 18% ஏற்படுகின்றன. ஆனால் இக்குடும்பங்களிடையே ஏற்படும் வெண்திட்டுகள் ஒரே மாதிரியாக எல்லாருக்கும் அமையாது.  ஒவ்வொரு விதமாக தோன்றுகின்றன. 

இந்நோய் தோன் ற உதவும் காரணங்கள் சொத்தை பல், உள் நாக்கு, அலர்ஜி, சீழ்க்காது முதலியவையும் மற்றும் செரிமானமின்மை இரைப்பையில் அமிலம் அற்ற நிலை, கல்லீரல் வேலை செய்யும் திறன் குறைதல் போன்ற நிலைகளும் ஆகும்.  மனக்கவலை, உடல்நல கோளாறு புரதம் வைட்டமின் தாதுப்பொருட்கள் குறைவற்ற நிலையம் எதிரில் தோன்ற உதவுகின்றன. 

தாதுப் பொருள்களில் செம்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் நிறமிச் செல்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.  வைட்டமின்-பி குறிப்பாக தையிபின் ரிபோபினோனின்,  பைரிடாக்சின் முதலியவை இப்புள்ளிகள் தோன்ற நிலைக்கு உதவுகின்றன.  மேலும் ஆராய்ச்சியின்படி விலங்குகளுக்கு வெண்ணிறத் திட்டுகளை உண்டாக்கி அவற்றுக்கு பயோடின் பான்டோதினிக் அமிலம் போன்றவை கொடுத்தால் இத்திட்டுகளை அகற்ற உதவுகின்றன. மேலும் ஃபோலிக் அமிலமும் பான்டோதினிக் சேர்ந்து நிறமிச் செல்களை உருவாக்க உதவுகின்றன.

இதற்கு மாறாக வைட்டமின் சி சத்து உள்ள ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற புளிப்புப் பொருட்கள் உண்பவர்களுக்கு நிறமிகள் மிகக் குறைவாகவே உண்டாகின்றன.  மேலும் இன்று உயிர்சத்து என்று வைட்டமின் சி-யை சிறியவர் முதல் பெரியவர் வரை உணவில் மட்டுமல்லாது டானிக்காகவும் மாத்திரைகளை உட்கொள்வது வழக்கமாகி விட்டது.  நோய்களுக்கு கூட இவ்வகை வைட்டமின்கள் நீண்ட நாட்கள் அதிக அளவில் கொடுக்கப்படுகிறது இந்நிலை ஏற்படக் காரணமாக அமைகின்றன.

No comments:

Post a Comment