சரும நோய் பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன என்று முன்னரே கூறியிருக்கிறோம். சில வகை சரும நோய்கள் தொற்று நோயாகவும் அமைவது உண்டு.
நமது உடல் சருமமானது புற உலகத் தொல்லைகள் இருந்து நம்மை பாதுகாக்கிறது என்று முன்னரே சொல்லி இருக்கிறோம். வெளி உலகில் நோய்களைத் தோற்றுவிக்கும் பலவிதமான நுண்ணுயிர்கள் காற்றில் உலவிக் கொண்டிருக்கின்றன. இது தவிர நமது உடலின் மீது வந்து கொட்டும் தூசி தும்புகள் பலவித நோய்களை சுமந்து கொண்டு வருகின்றன.
இது மட்டுமில்லாமல் பிறர் மனிதர்களுடன் நெருங்கிப் பழகும் போதும் பல பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலமும் நாம் வேலை செய்யும் இடங்களில் சூழ்நிலை காரணமாகவும் நமது உடல் சருமத்தில் கிருமிகள் தொற்று ஏற்பட்டு சரும நோய்களை தோற்றுவித்து விடக்கூடும்.
சில சமயம் சுவாச குழாய் மூலம் உண்ணும் உணவின் மூலம் ஒரு சில கிருமிகள் வயிற்றுக்குள் சென்று அவை மெல்ல மெல்ல வளர்ந்து சருமத்தில் நோய்களை ஏற்படுத்தி விடக்கூடும்.
பொதுவாக இம்மாதிரி ஏற்படக்கூடிய சரும நோய்களினின்றும் சருமத்தை பாதுகாப்பதற்கு உடல் சருமத்திலேயே பல ஏற்பாடுகள் உண்டு. ஆனால் இந்த ஏற்பாடுகள் பல்வேறு காரணங்களால் பலவீனம் அடைவதும் உண்டு. உதாரணமாக பரம்பரை வழியாக வரும் சருமநோய்கள், உணவு பற்றாக்குறையால் ஏற்படும் நோய்கள், உணவு ஒவ்வாமை காரணமாக ஏற்படும் சரும நோய்கள், காசநோய், நீரிழிவு காரணமாக ஏற்படுகிற உடல் பாதிப்புகள் சருமத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலவீனப்படுத்தி விடுவது உண்டு.
இது போன்ற சமயங்களில் நோய்க்கிருமிகள் மிக எளிதாக உடலில் தொற்றிக் கொண்டு பலவித நோய்களை ஏற்படுத்துகின்றன. நோய்க்கு காரணமான நோய்க்கிருமிகளை பொருத்து நோயின் அறிகுறிகள் வேறுபடுகின்றன. நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுவது தவிர சில ஒட்டுண்ணிகளாலும் தோல் பாதிக்கப்படுகிறது.
"தங்கி வாழும் பாக்டீரியாக்கள்"
நமது தோல் பரப்பின் மீது எப்போதும் பல வகையான பாக்டீரியாக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் பெரும்பாலானவை நிரந்தரமாக நமது தோலின் மீது வாழ்க்கை நடத்துகின்றன. இவை பொதுவாக உடலில் எத்தகைய நோயும் ஏற்படுவதில்லை. இதுபோன்ற பாக்டீரியாக்கள் "தங்கி வாழும் பாக்டீரியாக்கள்" என்று அழைக்கப்படுகின்றன. பல்வேறு சாறுண்ணி பாக்டீரியாக்கள் இந்த வகையைச் சார்ந்தவைதான்.
"வந்து போகும் பாக்டீரியாக்கள்"
ஆனால் சில பாக்டீரியாக்கள் நமது உடலில் பலவிதமான நோய்களை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற பாக்டீரியாக்கள் பொதுவாக "நோய் கிருமிகள்" என்று அழைக்கப்படுகின்றன. நோய்க்கிருமிகள் பொதுவாக தோலின் மீது நிரந்தரமாக தங்கி இருப்பதில்லை. எனவே இதுபோன்ற பாக்டீரியாக்கள் "வந்து போகும் பாக்டீரியாக்கள்" என்று அழைக்கப்படுகின்றன
நல்ல ஆரோக்கியமான தோல் நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் இயற்கையாகவே இருக்கிறது. எனவே நோய்க்கிருமிகள் தோலின் மீது அமர்ந்ததுமே அவை அழிக்கப் படுகின்றன. ஆனால் நோய்க் கிருமிகளை அழிக்க முடியாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் இருக்கும் போது அல்லது தோலின் இயற்கையான பாதுகாப்பு திறன் பலவீனம் அடைந்து இருக்கும் போது நோய்க்கிருமிகள் மிக எளிதாக தோலை பாதித்து பல விதமான நோய்களை ஏற்படுத்துகின்றன.
இவ்வாறு நோய்க்கிருமிகள் நோயை ஏற்படுத்தும் போது தோலில் சீழ் நிறைந்த புண்களை ஏற்படுத்துகின்றன. எனவே இது போன்ற தோல் நோய்கள் சீழ் வைக்கும் நோய்த்தொற்றுகள் என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக பாக்டீரியாக்கள் முடிக்குருத்துகளை பாதிக்கின்றன. அல்லது முடியில்லாத தோல் பரப்பை பாதிக்கின்றனவா என்பதை பொறுத்து நோய் அறிகுறிகள் வேறுபடுகின்றன.
புண்கள் புறத் தோலை மட்டும் பாதிக்கும் போது சீழ பழுப்பு நிறமாகவும் புறத் தோலையும் தாண்டி மேல்தோல் வரை புண்கள் ஏற்படும்போது சீழ் ரத்தக்கறை படிந்து காணப்படும். பாக்டீரியாக்கள் முடிக்குருத்தைப் பாதித்து அதனால் புண்கள் ஏற்படும் போது பாதிக்கப்பட்ட பகுதியில் தோலில் அடர்த்தியாக நிறைய பெண்கள் உண்டாகும். நாடி, கழுத்தின் பின்பகுதி, கை கால் போன்ற பகுதிகளில் இதுபோன்ற புண்கள் உண்டாகும்.
சில புண்கள் முடிக்குருத்தையும் அதை சுற்றியுள்ள வேறு திசுக் களையும் பாதிக்கும். எனவே இதுபோன்று ஏற்படும் புண்கள் பொதுவாக பெரிதாக இருக்கும். பெரும்பாலும் ஒரே ஒரு புண் மட்டும் தான் ஏற்படும். இதுபோன்ற புண் உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம்.
சில பாக்டீரியாக்கள் நகத்திற்கு அடியில் உள்ள தோலை பாதிக்கும் போது அந்த பகுதியில் சீழ் வைக்கிறது. இதை நகச்சுற்று என்பர். நகச்சுற்று பொதுவாக ஒரு சமயத்தில் ஒரு நேரத்தில் மட்டும் தான் ஏற்படும்.
இதுபோன்று ஏற்படும் புண்களை பொதுவாக முதல் நிலையில் வைக்கும் பெுண்கள் என்றும் கூறலாம். சில சமயங்களில் சிரங்கு, உராய்வு, தோல் நோய், பேன் தொந்தரவு போன்ற வேறு தோல் நோய்கள் தொடர்ந்து இரண்டாம் நிலையில் வைக்கும் நோய் தொற்றும் ஏற்படலாம், சிலருக்கு இது போன்ற புண்களில் உள்ள சீழ் ஒத்துக்கொள்ளாமல் புண்களை சுற்றி சிறு கொப்புளங்களும் வீக்கமும் ஏற்படும்.
சீழ் வைக்கும் நோய்த் தொற்றுகளை பொறுத்தவரையில் புண்களில் உள்ள சீழ் அகற்றுவதும் புண் ஏற்பட காரணமான பாக்டீரியாக்களை அழிப்பதும் புண்களை குணமாக்குவதும் தான் சிகிச்சையின் முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும். சீழை அகற்ற ஒரு சுத்தமான துணியை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலில் நனைத்து புண்களின் மீது ஒற்றி எடுக்கலாம். புண்களில் சீழ் வைக்க வைக்க அதை அகற்றி கொண்டே இருக்க வேண்டும். பொதுவாக காலையில் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் இவ்வாறு சீழை அகற்றுவது போதுமானது. இதுபோன்ற பெண்கள் தலையில் அல்லது வேறு முடி நிறைந்த பகுதியில் ஏற்பட்டிருந்தால், ஏதாவது ஷாம்புவைப் பயன்படுத்தி அந்த பகுதியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்
இவ்வாறு புண்களை சுத்தம் செய்த பின்னர் அவற்றின் மீது ஏதாவது பாக்டீரியா எதிர்ப்பு அல்லது ஆண்டிபயாடிக் மருந்துகளை தடவே வேண்டும். ஆனால் நோயாளிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடிய மருந்துகளை தவிர்க்க வேண்டும். அது போல நீரில் கரையாத ஊடகத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள களிம்புகளை சீழ்வடியும் புண்களுக்குப் பயன்படுத்தக்கூடாது.
சில சமயங்களில் நோயாளிக்கு ஊடுருவி குணப்படுத்தும் பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டி தான் இருக்கும். பொதுவாக புண்கள் உடல் முழுவதிலும் பரவலாக காணப்படும் போதும் புண்களுக்கு அருகில் உள்ள நிணநீர் சுரப்பிகள் வீங்கி வலி எடுக்கும் போது நோயாளிக்கு காய்ச்சல், சுகவீனம் போன்ற வேறு அறிகுறிகள் காணப்படும் போதும், புண்கள் அடித்தோல் வரை பரவியிருக்கும் போது. வெளிப்புற சிகிச்சையினால் புண்கள் குணமாகத போதும் ஊடுருவி குணப்படுத்தும் சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
மைக்ரோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்னும் பாக்டீரியாவினால் நோய் ஏற்படுகிறது. பொதுவாக இந்த பாக்டீரியா பாதிக்கப்பட்ட வேறு மனிதர்களிடமிருந்து அல்லது விலங்குகளிடமிருந்து தான் ஒருவருக்கு தோற்றுகிறது.
ஏற்கனவே இந்த பாக்டீரியாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எச்சில் மூலம் சிறுநீர் ஆகியவற்றில் இருந்து நேரடியாகவோ அல்லது சுவாச குழாய் மூலம் அல்லது உடலின் மூலம் ரத்தத்தில் கலந்து ரத்த ஓட்டத்தின் மூலம் தோலை அடைந்து இந்த நோய் மற்றவர்களுக்கு பரவுகிறது.
பொதுவாக தோலில் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு புண்ணோ அல்லது பல புண்களோ தோன்றலாம். ஒரு இடத்தில் தோன்றும் சுழற்சி கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து கொண்டே போகும். அதனால் அருகில் உள்ள வேறு பகுதிகளும் பாதிக்கப்படலாம். இதுபோன்ற புண்கள் உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக நீண்ட நாட்களாக குணமாகாத புண்கள் காசநோய் புண்களாக இருக்கலாம்.
தோல் காசநோயின் அறிகுறிகள் இருந்தாலும் அவற்றிற்கு எல்லாம் ஒரே விதமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. காசநோய்க்கு சிகிச்சை அளிக்க துவங்கிய ஒரு மாதத்திற்குள் பொதுவாக பழைய புண்கள் குணமாகி புதிய ஏற்படுவது நின்று விடும். ஆனால் அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகள் வரை தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டியதிருக்கும்.
No comments:
Post a Comment