சில வகை சருமப் பிணிகளும் அதற்கான சிகிச்சை முறைகளும் Some types of skin diseases and their treatment methods
சொரி சிரங்கு - மருந்து 1
குங்குலியம் கந்தகம் ஆகிய மூன்று சரக்குகளையும் வகைக்கு 20 கிராம் சேகரித்து நன்றாக இடித்து தூளாக்கிக் கொள்ளவேண்டும். விளக்கெண்ணையில் இந்த தூளை போட்டு தளர குழப்பி பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
சொரி சிரங்கிற்கு இது மிகவும் எளிய ஆனால் நல்ல குணம் தரக்கூடிய மருந்து. சொறி சிரங்கு மீது தொடர்ந்து தடவி வந்தால் சொறி சிரங்கு அகன்றுவிடும்.
கந்தகம், சூடம், அரிசி கார்போக அரிசி, ஏலம், மிளகு இவற்றை தேவையான அளவு சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியை நல்லெண்ணெயில் இட்டு காய்ச்சி வடித்துக் கொள்ள வேண்டும். கண்ணாடிப் பாத்திரம் அல்லது பீங்கான் பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது.
இந்த மருந்து எண்ணையை காலை நேரத்தில் சொறி சிரங்கு உள்ள உடற்பகுதியில் நன்கு தடவி தேய்த்து வைத்து கட்டி சுரப்பை விட்டு அரைத்து தேய்த்து குளிக்க வேண்டும். இந்த தைலத்தை சொறி சிரங்கின் தன்மைக்கேற்ப ஒன்று விட்டு ஒரு நாள் தொடர்ந்து பயன்படுத்தினால் சொறி சிரங்கு கொட்டிப் போய் விடும். உடல் அரிப்பும், நமட்டும், சொறியும் ஏற்படாமலிருக்க பகல் நேரத்தில் தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சர்க்கரை சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
மருந்து - 2
குளிக்கும்போதும் சற்று முன்னதாக எலுமிச்சம்பழத்தை உடலெங்கும் தேய்த்து பின் குளிப்பதும் நல்லது. எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து பிறகு தோலை வீணாக்கி விடாமல் தண்ணீரில் போட்டு இளம் சூடாக்கி குளித்தால் சரும நோய்களுக்கு நல்ல பலனை தரும். எலுமிச்சம்பழத்தை ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து சாப்பிட்டு வருவது பல வகையிலும் சருமத்திற்கு பயனளிக்கும்.
சரும நோய் வருமுன் தடுப்பு மருந்தாகவும் இது பயன்படும். சருமம் நல்ல பட்டு போன்ற மென்மை நிலையை அடையும். ஆனால் எலுமிச்சம்பழத்தை விடாமல் பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் குணம் தெரியும். கருஞ்சீரகத்தை சுத்தம் பார்த்து காடியை விட்டு அரைத்து தேமல் உள்ள இடங்களில் போட்டு வந்தால் தேமல் அகலும்.
மருந்து 3
பச்சிலை கடைகளில் நரி கொன்றைக் கொழுந்து கிடைக்கும். பசும்பாலில் இதனைத் கலந்து நன்றாக அரைக்க வேண்டும். இதனை சிறிய கொட்டைப்பாக்கு அளவு நாளுக்கு ஒரு வேளை சாப்பிட்டு வர வேண்டும். குறைந்தபட்சம் ஏழு நாட்கள் சாப்பிடுவது நல்லது. கடுமையான சொறிகளுக்கு இது கை கண்ட மருந்து.
மஞ்சளையும் வேப்பிலையையும் நன்கு அரைத்து அரிப்பு சொறி சிரங்கு உள்ள இடங்களில் தடவி வருவது எளிய மருத்துவம். முற்றிய பூவரசன் மரத்துப் பட்டையை சேகரித்துக் கொள்ள வேண்டும். பட்டையின் மேற்புறம் கரகரப்பாக உள்ள பகுதியை சுரண்டி அகற்றிவிடவேண்டும். பட்டையின் உள்பாகம் சுத்தமான உரல் அல்லது கல்வத்திலிட்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
இந்த தூளை இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து சுத்தமான நீரில் கலந்து காலையிலும் மாலையிலும் பருகி வரவேண்டும். சொரி சிரங்கிற்கு இது ஒரு சிறந்த மருந்து.
தேமல் ஏற்பட்டு அதன் காரணமாக சொரி தோன்றினால் சரக்கொன்றை வேரின் பட்டையை பசுவின் பால் கொண்டு அரைத்து தேமல் உள்ள இடத்தில் போட்டு வர வேண்டும். சந்தனமும் நீரடிமுத்தும். சம அளவில் எடுத்து கலந்து நைய அரைத்து தடவி வந்தால் சொறி சிரங்கிற்கு நல்லது. புளிச்ச கீரையை துவையலாக அரைத்து உணவோடு கலந்து தொடர்ந்து சிலநாள் உண்டு வந்தால் சொறி சிரங்கு இருக்கும் அல்லது இந்தத் துவையலை சாப்பிட்டு வந்தால் குடல் புண்ணாகிவிடும்.
நவச்சாரத்தை கொஞ்சம் தேன் விட்டு அரைத்து பத்திரப்படுத்தி வைத்திருந்து படைகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் படை கொட்டிப் போய் விடும்.
கல்யாண முருங்கை இலை எங்கும் எந்த நேரத்திலும் கிடைக்கும். அந்த இலையை நன்றாக இடித்து சாறு எடுத்து அதனோடு சோற்று உப்பை சேர்த்து அரைக்கவேண்டும்.
இந்த மருந்தை காலையில் சொறி சிரங்கு உள்ள இடங்களில் தடவி மாலையில் அரப்பு அல்லது சிகைக்காய் தூள் போட்டு தேய்த்து குளிக்க வேண்டும். படைக்கு இது பயனுள்ள மருந்து. கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வைத்து நன்றாக அரைத்துச் சிரங்கின் மீது பூசி வந்தால் சில நாட்களில் சிரங்கு ஆறிவிடும்.
உடல் முழுவதும் கடுமையான அரிப்பு இருந்தால் இதற்கு ஒரு இலகு வைத்தியம்.
பூவரசன் பட்டை,சூரத்து அவரை இலை, நீர் வெடிமுத்து பருப்பு, சோற்று உப்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து உடலில் தடவி கொஞ்ச நேரம் வைத்திருந்து பிறகு நீரில் குளித்து விட வேண்டும்.
குளிக்கும்போது பயற்றம் பருப்பு அல்லது கடலைப் பருப்பைத் தேய்த்துக் கொள்வது நல்லது. சிலருக்கு உடல் முழுவதும் எரிச்சலாக இருக்கும். காரணம் தெரியாது. அகத்திச் செடியின் வேரை சுத்தப்படுத்தி இடித்து கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் அளவு தண்ணீர் விட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சவேண்டும். காய்ச்சும்போது சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த கசாயத்தை வடித்து வைத்துக் கொண்டு ஓர் அவுன்ஸ் வீதம் ஒரு நாளைக்கு 3 வேளை குடித்து வர உடம்பு எரிச்சல் அகன்று உடல் குளுமை அடையும்.
வல்லாரைக் கீரை எங்கும் கிடைக்கும். பச்சிலை மருந்துகளை விற்கும் கடையில் நிச்சயமாக கிடைக்கும். வல்லாரைக்கீரை அருமையான மருந்து பொருள். வல்லாரைக் கீரையைச் சேகரித்து சுத்தம் செய்து புட்டு அவிப்பது போல இட்லி பானையில் வேக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு சருகாக உலரும் வரை நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். பின்னர் சுத்த உரல் அல்லது கல்வத்தில் இட்டு இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும்.
இந்தத் தூளை கண்ணாடி பாத்திரத்தில் பத்திரமாக வைத்து இருப்பது காலை மாலையில் ஒரு தேக்கரண்டி தூளை நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்தவிதமான கிரந்தி மேகநோய் குணமாகும்.
2 லிட்டர் அளவுக்கு தண்ணீரை ஒரு மண் பாத்திரத்தில் இட்டு பாத்திரத்தின் வாயை துணியால் கட்டி அதன் மீது வைத்து ஒரு மூடியால் மூடி விட வேண்டும். பின்னர் அதை அடுப்பிலிட்டு பிட்டவியலாக அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அவித்து கள்ளிக் கொழுந்தில் சிறிது எடுத்து சாறு பிழிந்து கொள்ளவேண்டும். இந்த சாற்றினை தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் ஆக மூன்று நாட்கள் கொடுத்தால் போதும். கருங்கிரந்தி போன்ற கடுமையான வகை பிணிகள் அகலும்.
இந்த மருந்து சாப்பிடும்போது பத்தியம் அனுஷ்டிப்பது அவசியம். கடுகு எண்ணெய் உப்பு புளி கூடாது. தேங்காய் எண்ணெயில் குரங்குலியத்தை போட்டு குழப்பி கிரந்திப் புண் மீது தொடர்ந்து தடவி வந்தால் சீக்கிரம் ஆறிவிடும்.
No comments:
Post a Comment