உடம்பில் ஏற்படும் வீக்கம் மற்றும் வெண்குட்டம் குணமா எளிய இயற்கை மருத்துவமுறை - Kalvimalar-கல்விமலர்

Latest

Sunday, November 1, 2020

உடம்பில் ஏற்படும் வீக்கம் மற்றும் வெண்குட்டம் குணமா எளிய இயற்கை மருத்துவமுறை

உடம்பில் ஏற்படும் வீக்கம் மற்றும் வெண்குட்டம் குணமா எளிய இயற்கை மருத்துவமுறை
  • நுணா இலைச்சாறு 100 மில்லி 
  • நல்லெண்ணெய் 500 மில்லி 
  • நுணா இலைச்சாறு விட்டு அரைத்து கார்போக அரிசி 250 கிராம் 

இவற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு காய்ச்சி மெழுகு பதத்தில் இறக்கி வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணெயில் மிகச் சிறிதாக நறுக்கிய மயிலிறகு 5 கிராமை கலந்து மீண்டும் அடுப்பேற்றி சிறிது நேரம் தீயாக எரித்து இறக்கி வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். 

நுணா தைலத்தில் 10 துளி காலை, இரவு சாப்பிட்டு வெளிப்பிரயோகமாகவும் பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வர 33 லிருந்து ஒன்பது மாதத்திற்குள் நல்ல பலன் கிடைக்கிறது. 

  • பனை வேர் 70 கிராம் 
  • துத்தி விதை 70 கிராம் 
  • காட்டுச் சீரகம் 70 கிராம் 
  • எள் 70 கிராம் 
  • மிளகு 70 கிராம் 
  • கொன்றை மரப் பட்டை 70 கிராம் 

இவற்றை தனித்தனியே சூரணித்துப் பின் ஒன்றாய்க் கலந்து வைத்துக்கொண்டு காலை மாலை இரவு மூன்று வேளையும் ஒரு கிராம் அளவு பாலில் சாப்பிட்டுவர வெண்குட்டம் தீரும். 

இந்த பொடியையே எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து பாதிக்கப்பட்ட இடங்களிலும் பூசி வரலாம்.

இலந்தை வேர்பட்டை 50 கிராம் 
அரச மரப்பட்டை 50 கிராம் 
கருஞ்சீரகம் 50 கிராம் 
உலர்ந்த மருதோன்றி இலை 10 கிராம் 
நிலப்பனங்கிழங்கு 50 கிராம் 

இவற்றை தனித் தனியே பொடித்து சலித்து கலந்து கொள்ள வேண்டும். இதில் ஒரு கிராம் காலை மாலை பகலில் சாப்பிட்டு வர குணமாகும். 

நில ஆமணக்கு வேர் 36 கிராம் 
நிலப்பனங்கிழங்கு 36 கிராம் 
நாகமல்லி வேர் 36 கிராம் 
மூங்கில் குருத்து 36 கிராம் 

மேற்கண்ட நான்கையும் உரலில் இட்டு இடித்து தூளாக்கிக் கொண்டு இதோடு 5 கிராம் பூண்டையும் 5 கிராம் நவச்சாரத்தை சேர்க்கவேண்டும். 

300 கிராம் நாவல் பட்டையை 3 லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி 100 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். 

மேற்குறிப்பிட்ட சூரணத்தையும் நவச்சாரம் பூண்டையும் கல்வத்தில் போட்டு நாவல்பட்டை குடி நீர் விட்டு நன்றாக அரைக்க வேண்டும். இதை சிறு சிறு உருண்டையாக உருட்டி காயவைத்து எடுத்து கொண்டு வெண் குட்டத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் தண்ணீர் விட்டு அரைத்து பற்றிட வேண்டும். இப்படி தொடர்ந்து பற்றிட்டு வர வெண்குட்டம் தீரும்.

No comments:

Post a Comment