சென்னையில் தோன்றிய வானவில் A rainbow appeared in Chennai - Kalvimalar-கல்விமலர்

Latest

Saturday, September 24, 2022

சென்னையில் தோன்றிய வானவில் A rainbow appeared in Chennai

சென்னை அம்பத்தூர் பகுதியில் திடீரென வானில் தெரிந்த வானவில்லால் மக்கள் ஆச்சர்யமடைந்தனர். பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் வாழும் மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவதில் இயற்கை தவறுவதே இல்லை. அந்த வகையில் பரபரப்பான சென்னையில் திடீரென தோன்றிய வானவில் மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.சென்னையை அடுத்த அம்பத்தூர் எஸ்டேட் பகுதி சனிக்கிழமை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 

ஆங்காங்கே இலேசான மழைத்தூரல் ஏற்பட்ட நிலையில் வானில் திடீரென வானவில் தோன்றியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் அதனை புகைப்படம் எடுத்துச் சென்றனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு சென்னையில் தோன்றிய வானவில்லால் மக்கள் ஆச்சர்யமடைந்தனர்.

People were surprised by a sudden rainbow in the sky in Ambattur area of ​​Chennai. Nature never fails to make people happy who live in the midst of various agitations. In that way, the sudden appearance of a rainbow in the busy Chennai made people happy. The Ambattur estate area next to Chennai was seen with clouds on Saturday.

A rainbow suddenly appeared in the sky while there was light rain here and there. Seeing this, the people of the area were surprised and took a picture of it. People were surprised by the rainbow that appeared in Chennai after a long time.

No comments:

Post a Comment