'குரூப் - 1' முதன்மை தேர்வு: மனிதநேயம் அறக்கட்டளை பயிற்சி
Photo by RF._.studio: https://www.pexels.com/photo/photo-of-woman-reading-books-3059654/
சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., இலவச கல்வியகம் சார்பில், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 'குரூப் - 1' முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் உதவி தொகையுடன், முதன்மை தேர்விற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
சைதை துரைசாமி, மல்லிகா துரைசாமி, வெற்றி துரைசாமி, வசுந்தரா வெற்றி ஆகியோரால், சமூக மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்களுக்கு உதவும் வகையில், மனிதநேய அறக்கட்டளை நடத்தப்படுகிறது.
இந்த அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., இலவச கல்வியகத்தில், பயிற்சி பெற்ற பல மாணவர்கள், அரசு பணி பெற்றுள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 'குரூப் - 1' முதல் நிலை தேர்வில், 2,162 பேர் முதன்மை தேர்வு எழுதும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை, முதன்மை தேர்வில் வெற்றி பெற தயார் செய்யும் வகையில், சமூக, பொருளாதார சூழலை கருதி, 100 மாணவர்களுக்கு, மனிதநேய கல்வியகத்தின் அனுபவமிக்க வல்லுனர் குழு பரிந்துரையின்படி தேர்வு செய்து, முழு நேர பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
நுழைவு தேர்வில் தகுதி பெறும் 100 மாணவர்களுக்கு, தலா மாதம் 10 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று மாதங்களுக்கு உதவி தொகை வழங்கப்படும். அதை பெற இயலாத மாணவர்களும், மாதிரி தேர்வு மற்றும் வகுப்புகளில் பங்கேற்கலாம்.
பயிற்சி வகுப்புகள், மே இரண்டாம் வாரம் துவங்கி, ஆகஸ்டு முதல் வாரத்தில் முடிவடையும்.
எனவே, முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற மனிதநேயம் மாணவர்கள் மற்றும் பிற மாணவர்கள், 044 - 2435 8373, 044 - 2433 0095, 99400 69739 என்ற தொலைபேசி எண்கள் வாயிலாக, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், 'www.mntfreeias.com' என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நேரில் பயிற்சி பெற இயலாதவர்களுக்கு பாடக் குறிப்புகள் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.
No comments:
Post a Comment