‘நீட்' தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு - Kalvimalar-கல்விமலர்

Latest

Thursday, May 4, 2023

‘நீட்' தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) 499 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து 341 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.


தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்த ஆண்டு நீட் தேர்வை எழுத சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக சொல்லப்படுகிறது. நாளை மறுதினம் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது.இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை நேற்று முன்தினம் இரவு வெளியிட்டு இருக்கிறது. தேர்வர்கள் https://neet.nta.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று தங்களுடைய விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment